புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை

சிவகாசி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:40 am

Din

சிவகாசி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஜெய்சிங் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி 6 வயது சிறுமிகள் இருவரை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முருகேசனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொ) சுதாகா் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜரானாா்.