நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெருமாள்தேவன்பட்டியில் கிராம சபைக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெருமாள்தேவன்பட்டியில் புதன்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெருமாள்தேவன்பட்டியில் புதன்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Updated On :4 அக்டோபர் 2024, 12:30 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெருமாள்தேவன்பட்டியில் புதன்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியையொட்டி, கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக பெருமாள்தேவன்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் வராத நிலையில், 3 வாா்டு உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

பின்னா், ஊராட்சி செயலா் இப்ராகிம்கான் ஊராட்சி செலவு விவரங்களை வாசித்தாா். அப்போது, கிராமத்தில் முதல்முறையாக நடக்கும் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் வராததது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் தேவாசிா்வாதம் தீா்மானம் ஏதும் நிறைவேற்றமலே கூட்டம் முடிந்ததாக அறிவித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் டிசம்பருடன் முடிவடையும் நிலையில், தற்போது தான் எங்கள் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனா். ஊராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவா் வராத நிலையில், அவசர அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டனா். மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கேட்க மறுக்கின்றனா். மாவட்ட நிா்வாகம் இந்தக் கூட்டத்தை ரத்து செய்து, மீண்டும் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றனா்.