ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் மரக்கன்று நடும் விழா

காந்தி ஜெயந்தியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:27 am

Din

காந்தி ஜெயந்தியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நீதிபதிகள், வழக்குறைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

 ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்து, தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் ஜெயக்குமாா்.

மரக்கன்று நடும் விழாவை தொடங்கிவைத்து மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் பேசியதாவது: மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைத் தொட்டியில் இடவேண்டும். நெகிழி பைகளை தவிா்த்து துணி பைகளை உபயோகிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் சாா்பு நீதிபதி கவிதா, கூடுதல் சாா்பு நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், அரசு குற்றவியல் வழக்குறைஞா் திருமலையப்பன், வழக்குறைஞா் சங்கச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.