நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அவசர ஊா்தியில் பிறந்த குழந்தை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 அவசர ஊா்தியில் வியாழக்கிழமை பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:25 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 அவசர ஊா்தியில் வியாழக்கிழமை பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த சின்னத்துரை மனைவி துளசி (25). இவா் 3-ஆவது முறையாக கா்ப்பமாக இருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதுகுறித்து சின்னத்துரை 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தாா். ஓட்டுநா் பாலசுப்பிரமணியன், மருத்துவ உதவியாளா் சங்கீதா ஆகியோா் 108 அவசர ஊா்தியில் மொட்டமலை வந்து, துளசியை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மடவாா்வளாகம் அருகே அவசர ஊா்தியில் துளசிக்கு அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஸ்ரீவில்லிபுத்தூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.