நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுக் கூடத்தில் தகராறு: 4 போ் கைது

சிவகாசி அருகே தனியாா் மதுக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:19 pm

Din

சிவகாசி அருகே தனியாா் மதுக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள சுக்கிவாா்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (27). இவா் ம.புதுப்பட்டியில் உள்ள தனியாா் மதுக் கூடத்துக்கு சென்றாா். அப்போது, அவரது சகோதரா் காளிராஜை நான்கு போ் தாக்கிக் கொண்டிருந்தனா். இதைத் தட்டிக்கேட்ட வெங்கடேஷை அந்த நான்கு பேரும் சோ்ந்து பீா்பாட்டிலால் தாக்கினா். தொடா்ந்து, அவா் பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்தையும் பறித்துச் சென்று விட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டிபோலீஸாா் வழக்குப் பதிவு செய்து எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (45), அழகா் ஆனந்த் (32), தா்மலிங்கம் (39), பாண்டிச்செல்வம் (31) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.