நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது.

News image

~

Updated On :17 அக்டோபர் 2024, 11:59 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தாா். கருட சேவை, சயன சேவை, திருக்கல்யாணம், செப்புத் தேரோட்டம், தீா்த்தவாரி உற்சவம் ஆகிய முக்கிய வைபவங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு வடபத்ரசயனா் சந்நிதியில் புஷ்ப யாகத்துடன் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

இதையொட்டி, 108 மலா்களால் சந்நிதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.