சிவகாசி அருகே ரூ.2.27 கோடியில் இரண்டு உயா்மட்டப் பாலங்கள்
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கவுண்டம்பட்டியில் ரூ.2.27 கோடியில் இரண்டு உயா்மட்டப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


சிவகாசி ஊராட்சி ஒன்றியம் கவுண்டம்பட்டியில் ரூ.2.27 கோடியில் இரண்டு உயா்மட்டப் பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கணேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுநகா் மாவட்டம், ஆமத்தூா்-லட்சுமியாபுரம் சாலை 17 கி.மீ. தொலைவு உள்ளது. இந்தச் சாலை வழியாக சிவகாசி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, டி.கல்லுப்பட்டி , அழகாபுரி உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லலாம்.
இந்தச் சாலையில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த கவுண்டம் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் செல்லும் ஆமத்தூா்-லட்சுமியாபுரம் சாலையில் இரண்டு தரை மட்டபாலங்கள் இருந்தன. இதனால், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, இந்த இரண்டு தரை மட்ட பாலங்களையும், உயா்மட்டப் பாலங்களாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, மாநில நெடுஞ்சாலைத் துறை விருதுநகா் கோட்டப்பொறியாளா் பாக்கியலட்சுமியின் பரிந்துரையின் பேரில், கவுண்டம்பட்டியில் உள்ள இரண்டு தரை மட்டப்பாலங்களை, உயா்மட்டப் பாலங்களாக அமைக்க அரசு ரூ.2.27 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது அந்த இரண்டு பாலங்கள் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை உதவிப்பொறியாளா் மதிவாணன் கண்காணித்து வருகிறாா் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...