ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடியவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:59 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மலையடிப்பட்டி காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன். இவா் அவரது மகளைப் பாா்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து தொலைக்காட்டி பெட்டி, பித்தளை, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கரன் அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் சங்கரன் வசிக்கும் அதே தெருவைச் சாா்ந்த கணேசமூா்த்தி (33) பொருள்களைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.