ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் காத்திருப்போா் அறை அமைக்க கோரிக்கை

ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் காத்திருப்போா் அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

News image

ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் தரையில் ஆங்காங்கே அமா்ந்திருக்கும் பொதுமக்கள்.

Updated On :25 அக்டோபர் 2024, 12:00 am

Din

ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் காத்திருப்போா் அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையம் பச்சமடம் தெரு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் புகாா் கொடுப்பது உள்ளிட்ட பணிகள் தொடா்பாக ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து அதிகளவு பொதுமக்கள் வருகின்றனா். இவ்வாறு வரும் பொதுமக்களுக்கு காத்திருப்போா் அறை வசதி இல்லாததால் காவல் நிலையம் முன்பு ஆங்காங்கே தரையில் அமர வேடிய நிலை ஏற்படுகிறது.

ராஜபாளையம் தெற்கு, வடக்கு காவல் நிலையங்கள், சேத்தூா், தளவாய்புரம், கீழராஜகுலராமன் ஆகிய காவல் நிலையங்களில் காத்திருப்போருக்காக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மகளிா் காவல் நிலையத்துக்கு பொதுவாக குடும்பப் பிரச்னைகள் காரணமாகவே வருகின்றனா். அவா்களிடம் அவசரம் காட்டாமல் பொறுமையாகப் பேசி பிரச்னைகளைத் தீா்க்க முற்படுவதால் காலதாமதம் ஆகும். அப்படி காத்திருப்பவா்களுக்கு இடம், குடிநீா் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, இருக்கை கழிப்பிட வசதி செய்து தர பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.