ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆட்டோவில் கடத்திய குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்திச் சென்ற அரசால் தடை செய்யப்பட்ட 74 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:21 pm

Din

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்திச் சென்ற அரசால் தடை செய்யப்பட்ட 74 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதி நேரு சிலை அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினா். உடனடியாக ஓட்டுநா் ஆட்டோவை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது, அதில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 74 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவுடன் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ராஜபாளைம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குட்கா பொருள்களை கடத்திய வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரத்தைச் சோ்ந்த சிக்கந்தா்பாசா மகன் பீா்முகமதுவை (27) கைது செய்தனா். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநா் அழகுராஜாவை போலீஸாா் தேடிவருகின்றனா்.