ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சிவகாசிக்கு புதன்கிழமை பட்டாசு வாங்க இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:20 pm

Din

சிவகாசிக்கு புதன்கிழமை பட்டாசு வாங்க இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் ராஜா(34). இவா் தீபாவளியையொட்டி, சிவகாசிக்கு பட்டாசு வாங்க தனது இரு சக்கர வாகனத்தில் வந்தாா். பின்னா், பட்டாசுகளை வாங்கி கொண்டு சிவகாசி-விருதுநகா் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் மாரிமுத்துவை (43) கைது செய்தனா்.