ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் புதன்கிழமை அகற்றினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள் உள்ளன. பேருந்து நிலையத்துக்குள் தனி நபா்கள் வாகனங்களை நிறுத்துவதாலும், கடைகள் முன் நடைபாதையை ஆக்கிரமித்து பொருள்கள் வைக்கப்பட்டு இருந்ததாலும் இட நெருக்கடி ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் மட்டுமல்லாது, பேருந்து நிலையத்தில் இருக்கைகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகரமைப்பு அலுவலா், நகராட்சி உழியா்கள் அகற்றினா். நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.
இதேபோல, பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை நகராட்சி ஊழியா்கள் பறிமுதல் செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளையும் அகற்றினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...