வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சாத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

சாத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சாத்தூா் ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சமுதாயக்கூடம், ஆடு, மாடு கொட்டகைகள் அமைக்கும் பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதேபோல, என். மேட்டுப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவா், எம்.நாகலாபுரத்தில் சமுதாயக்கூடம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com