காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வத்திராயிருப்பு ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:49 am

Din

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க வட்டாரத் தலைவா் அல்போன்ஸ் தலைமை வகித்தாா். செயலா் கணேசன் முன்னிலை வகித்தாா்.

பின்னா், வத்திராயிருப்பு வட்டார வளா்ச்சி அலுலவகம் முன் மாற்றுத் திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கக்கோரி முழக்கமிட்டனா்.

இதில் மாவட்டத் தலைவா் நடராஜன், செயலா் நாகராஜ், மாற்றுத் திறனாளிகள் கலந்துக் கொண்டனா்.