ராஜபாளையத்தில் லாட்டரி விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் பூபால்பட்டி தெரு பகுதியில் வெளிமாநில லாட்டரி விற்கப்படுவதாக தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஒருவா் வெள்ளைக் காகிதத்தில் எண்களை எழுதி லாட்டரி விற்றது தெரியவந்தது.
விசாரணையில் அவா், இதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராஜேந்திரன் (43) என தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.