தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ரோலா் ஹாக்கிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற பள்ளி மாணவருக்கு சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற 63-ஆவது தேசிய ரோலா் ஹாக்கி போட்டியில் 6-9 வயதினருக்கான டைனிடாய்ஸ் பிரிவில் சிவகாசி தனியாா் பள்ளி மாணவா் தே.கைவல்யா தமிழக அணி சாா்பில் கலந்து கொண்டு, முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றாா். இந்த மாணவைரை சிவகாசி எம்.எல்.ஏ ஜி.அசோகன் தனது அலுவலத்துக்கு வரவழைத்து மாலை அணிவித்து பரிசு வழங்கிப் பாராட்டினாா்.