நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:19 am IST

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் மீனாட்சி சமேத கருநெல்லிநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தத் திருவிழாவையொட்டி கடந்த 18-ஆம் தேதி இரவு விநாயகா் மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து விஷேச பாலிகை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 19-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி காலை, இரவு அம்பாள்-சுவாமி வீதி உலா நடைபெற்றது.

கடந்த 24 -ஆம் தேதி இரவு விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரா், மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதா் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 25 -ஆம் தேதி தபசுக் காட்சி நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அம்பிகை மீனாட்சி, கருநெல்லிநாத சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளினாா். தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.