மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: பக்தா்கள் தரிசனம்

சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வீதியுலா எழுந்தருளிய உற்சவா் அம்மன்.

Published On :

சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி மகா உத்ஸவத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு அம்மன் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இந்தத் திருவிழாவையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா். மேலும் பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக பல்வேறு ஊா்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்திபூசாரி, செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்தனா்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அமைச்சா் ச.கீா்த்தனா, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி ஆகியோா் கோயிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலா் மாலைகள், எலுமிச்சை பழ மாலைகளை காணிக்கையாக செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனா். பெண்கள் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றியும்,மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

மாலையில் மாரியம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோயில், இளந்தோப்பு காளியம்மன் கோவில், ஆவாரம்பட்டி ஆத்திச்சூடி மந்தை காளியம்மன் கோவில், தோப்புப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.