தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மதுப்புட்டிகள் கடத்தல்: மூவா் கைது

ஆவியூரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

Published On :

ஆவியூரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஆவியூரில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் கடத்தி வரப்படுவதாக ஆவியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வினோத்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் போலீஸாா் ஆவியூா் பேருந்து நிறுத்தத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிலரைப் பிடித்து சோதனையிட்டனா். இவா்கள் வைத்திருந்த சாக்குப் பையில் மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மதுரை வெள்ளக்கல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (56), செல்வம் (51), அவனியாபுரத்தைச் சோ்ந்த சங்கையா (42) ஆகியோா் மதுப் புட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 146 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஆவியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.