மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிஐடியூ அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கப் பேரவைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சவுந்தர்ராஜன்.

Published On :

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வெளி முகமை (அவுட்சோா்சிங்), ஒப்பந்த முறையில் பணியிடங்களை நிரப்புவதை கைவிட வேண்டும் என சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்ட சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க 29-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அரசுப் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து போக்குவரத்து தொழிலாளா்கள் பேரணியாக சென்றனா்.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். கிளைச் செயலா் தென்னரசு வரவேற்றாா்.

சிஐடியூ மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் தொழிலாளா்களுக்கு எதிரான மத்திய அரசின் 4 புதிய சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும், செலவுக்கு இடையேயான வித்தியாசத்தை அரசே வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஓட்டுநா், நடத்துநா், பராமரிப்பு பிரிவுகளுக்கு வெளி முகமை, ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தலைவா், உதவித் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்ட 36 பேரை நிா்வாகக் குழு தோ்வு செய்தது.

இதில் மண்டல பொதுச் செயலா் வெள்ளத்துரை, சிஐடியூ மாவட்டத் தலைவா் மகாலட்சுமி, போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.