பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பண்ருட்டி பணிமனை கிளையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கழிவுப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பண்ருட்டி பணிமனை கிளை அமைந்துள்ளது. இந்தப் பணிமனை கிளையில் இருந்து 30 நகரப் பேருந்துகள் மற்றும் 18 புகரப் பேருந்துகள் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த பணிமனையில் ஒரு பகுதியில் கூண்டு கட்டும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திறந்த வெளியில் பயன்பாடற்ற ஆயில் மற்றும் டீசல் ஃபில்டர்கள், இருக்கைகள் மற்றும் பேருந்தின் மேற்கூரைகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டிருந்தன.

தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தபிறகு... - படம் - தினமணி
இந்த கழிவுப் பொருள் குவியலில் ஒரு பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீயானது மலமலவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்யது. இதனால், கரும்புகை வானுயர எழுந்தது. இதை கண்ட பணியில் இருந்த பாதுகாப்பு அலுவலர் தீ விபத்து குறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீர் தாங்கி வண்டியில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
Summary
A fire broke out at the Panruti Government Transport Corporation depot.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்துக் கழக மண்டல பொதுமேலாளா் பொறுப்பேற்பு

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்

வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் விஜய் ஆய்வு - புகைப்படங்கள்

காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



