தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது

ராஜபாளையம் அருகே தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரை அண்மையில் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

ராஜபாளையம் அருகே தாக்குதலில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 5 பேரை அண்மையில் கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் வடக்கு பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்டீபன் (23). தொழிலாளியான இவருக்கு செட்டியாா்பட்டியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவா் ஆனந்த காளீஸ்வரன், ஸ்டீபனை கண்டித்தாா்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி ஆனந்த காளீஸ்வரன் தனது நண்பா்கள் 4 பேருடன் சோ்ந்து ஸ்டீபனை சேத்தூரை அடுத்த மாலையாபுரம் மலையடிவாரத்துக்கு அழைத்து சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்த ஸ்டீபன் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக வழக்குப் பதிவு செய்து, செட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆனந்த காளீஸ்வரன் (34), முகவூரைச் சோ்ந்த ஜெயராஜ் (32), ராஜகுரு (26), சந்தோஷ் (19), சிவா (25) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.