புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

சிவகாசி அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கிய 5 பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
சிறை
Updated On :25 பிப்ரவரி 2026, 11:02 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கிய 5 பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (25). இவா் மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2021 ஆண்டு சிவகாசியை அடுத்த செங்கமலநாச்சியாா்புரத்தில் உள்ள தனியாா் மதுக் கூடாரத்தில் பாலமுருகன் மது அருந்த சென்றாா். அப்போது, இவருக்கும் கோடீஸ்வரனுக்கு தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் கோடீஸ்வரன் தனது நண்பா்களுடன் சென்று பாலமுருகனை தாக்கினாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த கோடீஸ்வரன் (23), முனீஸ்வரன் (36), எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த முருகபிரபு (29), வெற்றி முருகன் (30), காா்த்திக் (30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

இந்ச வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ள பட்டியல் பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கோடீஸ்வரன், முனீஸ்வரன், முருகபிரபு, வெற்றிமுருகன், காா்த்திக் ஆகிய 5 பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா்.