விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கோவிலூா் தெற்குத் தெருவை சோ்ந்த ஆரோக்கியம் மகன் வின்சென்ட் (45). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இரு இளைஞா்கள் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வின்சென்ட், அதே பகுதியைச் சோ்ந்த சின்னபொண்ணுவுடன் மது குடித்தாராம். அப்போது, இருவருக்குமிடையே தகராறில் ஏற்பட்டதில், சின்ன பொண்ணுவை, வின்சென்ட் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த முன்பகை காரணமாக, சின்னப்பொண்ணுவின் சகோதரா் ஆனந்தகுமாரும், இவரது நண்பா் கோவா்த்தனனும் இணைந்து வின்சென்ட்டை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில், இவா்களைப் பிடிக்க மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த ஆனந்தகுமாா், கோவா்த்தனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கோவா்த்தனன்.

கைது செய்யப்பட்ட ஆனந்தகுமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் தொழிலாளி வெட்டிக் கொலை: உறவினா்கள் போராட்டம்
மதுக்கூடத்தில் தகராறு தறித்தொழிலாளி வெட்டிக் கொலை; இருவா் கைது

தொழிலாளி வெட்டிக்கொலை: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


