விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளியை வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே தேவதானத்தையடுத்த கோவிலூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தெற்கு தேவதானம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்.
இவரது மகன் கூலித் தொழிலாளியான வின்சென்ட்(45). இவர் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் உள்ள பெண்ணை திருமணம் செய்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு வந்த இரு இளைஞர்கள் வின்சென்ட்டுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தகவலறிந்து வந்த சேத்தூர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவல் துறையினரின் விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக வின்சென்ட் அதேப் பகுதியைச் சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருடன் மது அருந்திய போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில், சின்ன பொண்ணுவை வின்சென்ட் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இருவரது குடும்பத்திற்கும் முன்பகை நீடித்து வந்த நிலையில், சின்னப்பொண்ணுவின் சகோதரர் ஆனந்தகுமாரும், அவரது நண்பர் கோவர்த்தனன் ஆகிய இருவரும் இணைந்து வீட்டில் இருந்த வின்சென்டை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
Summary
Police are searching for unidentified individuals who entered a wage laborer's house near Rajapalayam in Virudhunagar district and hacked him to death.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓமலூர் அருகே முதிய தம்பதியர் அடித்துக் கொலை! தொடரும் பயங்கரம்
கூலித் தொழிலாளி தற்கொலை

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



