FOLLOW US

ON GOOGLE DISCOVER

வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

ஓமலூர் அருகே முதிய தம்பதியர் அடித்துக் கொலை! தொடரும் பயங்கரம்

ஓமலூர் அருகே முதிய தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

News image

அமராவதி, ஜெயராமன் தம்பதியர். - படம்: தினமணி

Updated On :21 ஜூலை 2026, 12:23 pm IST

ஓமலூர் அருகே நகைக்காக முதிய தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி குண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதியர். வயதான இவர்கள் தனிமையில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

தனிமையில் உள்ள ஜெயராமன் மற்றும் அமராவதி தம்பதியினருக்கு அவரது இளைய மகன் அவ்வப்போது, உணவு கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், அவர்களின் பேரன் நவநீதன் நேற்று இரவு தனது தாத்தா - பாட்டிக்கு சாப்பாடு எடுத்துச் சென்றுள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, உடனடியாக அவர், பெற்றோருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூதாட்டி அமராவதி அணிந்திருந்த காது மற்றும் மூக்கில் இருந்து நகைகள் பிடுங்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

நகைக்காக கொலைச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. பின்னர், இருவரின் பிரேதத்தையும் கைப்பற்றி மருத்துவமனை பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் வாழும் முதியோர்களை குறிவைத்து நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பரவலாக, இது போன்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Summary

The police are conducting an intensive investigation into the incident where an elderly couple was beaten to death for their jewelry near Omalur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.