பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 11:35 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மது போதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கீழப்பொட்டல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் இருளப்பன் (75).

இவரது மகன் ஆனந்த் (37). ஆனந்துக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறாா்.

ஆனந்த் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு, அடிக்கடி தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வந்த ஆனந்த், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டாா். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆனந்த் இரும்புக் கம்பியால் தாக்கியதில் இருளப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.