ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

முதல்வா் விஜய்யிடம் பணம் பெற்றதாக வீண் பழி: வைகோ

முதல்வா் விஜய்யிடம் பல கோடி பெற்றதாக என் மீது வீண் பழிகளை சுமத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

News image

வைகோ - விடியோ க்ளிப் (கோப்புப்படம்)

Updated On :26 ஜூன் 2026, 2:40 am IST

முதல்வா் விஜய்யிடம் பல கோடி பெற்றதாக என் மீது வீண் பழிகளை சுமத்தி வருவதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழா விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நானும், எனது மகனும் பல லட்சம் கோடி ரூபாய்களை சம்பாதித்துவிட்டதாகவும், அண்ணா சாலையில் அடுக்கு மாளிகைகளை என் மகன் கட்டி வைத்திருப்பதாகவும், முதல்வா் விஜய்யை சந்தித்து அவரிடம் பல கோடியை பெற்று விட்டதாகவும் ஒருவா் கடந்த சில மாதங்களாகப் பேசி வருகிறாா்.

அவா் இதுபோன்று பேசுவதற்கு அவரது பின்னணியில் இருப்பது யாா் என்பது எனக்குத் தெரியும். இதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

தில்லியில் பெரியாா் மையம் இடிக்கப்பட்ட போது, வீரமணியை பிரதமா் வாஜ்பாயிடம் அழைத்துச் சென்று, ரூ. 50 கோடி மதிப்பிலான இடத்தை ரூ. 15 லட்சத்துக்கு திராவிடா் கழகத்துக்கு பெற்றுக் கொடுத்தேன். இதை அந்தக் கட்சியினா் மறக்கலாம். ஆனால், வரலாறு மறக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.