/

கடன் பாதுகாப்புக் காப்பீட்டின் முக்கியத்துவம்!

கடன் பாதுகாப்பு காப்பீடு குறித்து..

News image

Simply

Updated On :1 ஜூலை 2026, 12:24 am IST

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் எடுத்த சிந்தனையுள்ள நிதிமுடிவு, எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பங்களை பாதுகாப்பதில் கடன் பாதுகாப்புக் காப்பீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது. அந்த தொழில் முனைவோர் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) வங்கியில் இருந்து கடன்பெற்றிருந்தார். மேலும், Star Union Dai-ichi Life Insurance (SUD Life) நிறுவனத்தின் Sampoorna Loan Suraksha Plus திட்டத்தின்கீழ் கடன்-ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்திருந்தார். இந்தக் காப்பீட்டின் பாதுகாப்புத் தொகை சுமார் ரூ. 1.39 கோடி ஆகும்.

காப்பீட்டுத் திட்டத்தின் அமைப்பின்படி, சுமார் ரூ. 1.39 கோடி மதிப்பிலான காப்பீட்டு கோரிக்கைத் தொகை முதன்மையாக கடன் வழங்கிய நிறுவனத்திடம் நிலுவையில் இருந்த கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இதில், சுமார் ரூ. 1.36 கோடி கடன் கணக்கை முழுமையாகச் செலுத்த பயன்படுத்தப்பட்டதால், கடன் திருப்பிச்செலுத்தும் பொறுப்பு குடும்பத்தினருக்கு மாற்றப்படாமல் தடுக்கப்பட்டது. மீதமுள்ள தகுதியான தொகையான சுமார் ரு. 3.3 லட்சம், காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, நியமனதாரருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வைப் பற்றி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அப்பே திவாரி, கூறியதாவது: “நிதித்திட்டமிடல் என்பது வெறும் சொத்துகளை உருவாக்குவது மட்டுமல்ல எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற சூழ்நிலைகளிலிருந்துநம் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதும் அதில் அடங்கும்.”மேலும், கடன் - ஆயுள் காப்பீடு (Credit Life Insurance) குடும்பத்தின் நிதிநிலைத் தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது என்றும், கடினமான காலங்களில் நிலுவையில் உள்ள கடன்கள் குடும்பத்திற்கு கூடுதல் சுமையாக மாறாமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வு, முழுமையான நிதித்திட்டமிடலில் காப்பீடு வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டுகிறது. குறிப்பாக, இந்தக் குடும்பத்திற்கு வீட்டு கடன் பெறும் நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு முன்யோசனையான முடிவு, மிகவும் அவசியமான தருணத்தில் அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க உதவியது. இது, எதிர்பாராத சூழ்நிலைகளில் குடும்பத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதில் காப்பீட்டின் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது.

SUD Life நிறுவனம், 2025 – 26 நிதியாண்டில் பெறப்பட்ட தனிநபர் ஆயுள் காப்பீட்டு கோரிக்கைகளில் 99.01% கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. இது, வாடிக்கையாளர்களுக்கு துரிதமான நிதி உதவியை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதிகளவிலான கோரிக்கைகள் தீர்வுகாணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தகவல் அளிக்கப்பட்ட அனைத்து காப்பீட்டு கோரிக்கைகளிலும் இரு-மூன்றில் அதிகமானவை (68%) தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகாணப்பட்டன. இது, காலத்திற்கேற்றசேவை, செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவை அணுகுமுறையில் நிறுவனத்தின் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.