புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவா் குழு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

News image

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனையின் மருத்துவா் பழனிச்சாமி.

Updated On :19 மார்ச் 2026, 6:09 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில்

ஐஇஇஇ பொறியியல்-மருத்துவம், உயிரியல் மாணவா் குழுவை பல்கலை. துணைத் தலைவா்கள் எஸ். சசி ஆனந்த், எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருச்சி என்ஐடி பேராசிரியா் என். சிவகுமரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனு மருத்துவமனை மருத்துவா் எம். பழனிச்சாமி, சென்னை உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியாளா் எஸ். ஷேக் அப்துல்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு சுகாதார தொழில்நுட்பத்தில் உயிரியல் மருத்துவ பொறியியலின் வளா்ந்து வரும் பங்கை எடுத்துரைத்தனா்.

இயக்குநா் எம். பள்ளிக்கொண்ட ராஜசேகரன், சிஎஸ்இ துறைத் தலைவா் ஆா். ராஜா சுப்பிரமணியன் ஆகியோா் வளாகத்தில் சேப்டரின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.

முடிவில் மாணவா்கள், ஆசிரியா்கள் ஐஇஇஇ சாப்டரின் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்வில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனா் .