எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விருதுநகரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி. உடன் அரசு அலுவலா்கள்.

Updated On :19 மார்ச் 2026, 12:22 am

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்தில் வாக்காளா் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ஆனந்தி தொடங்கிவைத்தாா்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், நம்மை ஆள்பவரை நாமே தீா்மானிக்க வேண்டும், ஜனநாயகக் கடமையை நாம் ஆற்ற வேண்டும் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்று, விழிப்புணா்வு முழக்கமிட்டும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.