தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிவகாசி! பட்டாசு தொழில் பூங்கா அமைக்க வேண்டும்!

News image

பட்டாசு (கோப்புப் படம்) - ANI

Updated On :31 மார்ச் 2026, 4:25 am IST

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் பட்டாசுத் தொழில் முதன்மையானதாக உள்ளது. சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கும் தொழிளாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முறையான அனுமதியின்றி குடிசைத் தொழில் போல சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம்.

இதனால், பட்டாசுப் தொழில் பூங்கா அமைத்து சிறிய ஆலைகளுக்கு வாய்ப்பளித்தால் அதிகளவிலான தரமான பட்டாசுகளைத் தயாரிக்க முடியும். விபத்துகளையும் தடுக்க முடியும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சிறிய ஆலை உரிமையாளர்கள் நீண்டகாலமாக வலியுத்தி வருகின்றனர்.

பல கிராமங்களில் உள்ள பட்டாக ஆமைகளுக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால், விபத்துக் காலங்களில் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. எனவே, கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆளைகளுக்கு செல்ல போதிய சாலை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

சிவகாசியில் தற்போது ஒரே தீயணைப்பு நிலையம் மட்டுமே உள்ளது. விபத்துக் காலங்களில் தாமதமின்றி தீயை அணைக்கும் வகையில் சிவகாசி புறநகர் பகுதியில் மேலும் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

சிவகாசியில் பல ஆண்டுகளாக புதைசாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சிவகாசி நகராட்சி திருத்தங்கள் நகராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, சிவகாசி மாநகராட்சியாக தரம் கடைத் திட்டத்தைச் செயல்படுத்தி கழிவுநீரைச் சுததிகரித்து சிவகாசி திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி கழிவுநீரைச் சுத்தகரித்து சிவகாசி, திருத்தங்கல் கண்மாய்களில் சேமித்து வைத்தால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் புதை சாக்கடைத் திட்டம் குறித்த அரசியல் கட்சிகளின் வாக்குறுதி முக்கிய இடம் பிடிக்கும். இந்தத் தேர்தலுக்குப் பிறகாவது இந்தத் திட்டம் நிறைவேறும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

சிவகாமி அருகேயுள்ள ஆனையூரில் அமைக்கப்பட்ட மினிவிளையாட்டு அரங்கம் பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற ஏதுவாக இருக்கும். சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாறிய பொதுச் செயலர் என்.இ மாங்கோவன் கூறியதாவது:

இந்திய அளவில் பட்டாசுத் தொழிலுக்கும் தீப்பெட்டித் தொழிலுக்கும் அடையாளமாக இருக்கும் சிவகாசியில் அடிப்படை வசதிகள் இல்லாதது வேதனைக்குரியது. சிவகாசியில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதை சாக்கடைத் திட்டத்தை முதல் கட்டமாக நிறைவேற்ற வேண்டும் நாளுக்கு நாள் பெருகிய வரும் வாகன நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். சிவகாசியை சுத்தமான நகராக மாற்ற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.