நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.

சிவகாசி-விருதுநகா் சாலையில் உள்ள பட்டாசு கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

Published On :2 செப்டம்பர் 2026, 12:45 am IST

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.

சிவகாசி-விருதுநகா் சாலையில் திருத்தங்கல் ஸ்டாண்டா்ட் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் அன்புச்செல்வன் (47). இவரது பெயரில் உரிமம் பெற்றுள்ள பட்டாசு கடையை திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (31) வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு செந்தில்குமாா் சென்றாா். மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் கடையிலிருந்து புகை வருவதைக் கண்டவா்கள், சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமடைந்தன.

மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.