நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

விதிமீறல் புகாரில் 40 பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் குறிப்பாணை: உரிமையாளா்கள் அதிருப்தி

விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டு அனுமதி வழங்கிய 40 பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் குறிப்பாணை வழங்கப்பட்டதால் ஆலை உரிமையாளா்கள் அதிருப்தி அடைந்தனா்.

பட்டாசு(கோப்புப்படம்) - PTI

Published On :3 செப்டம்பர் 2026, 6:07 am IST

விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டு அனுமதி வழங்கிய 40 பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் குறிப்பாணை வழங்கப்பட்டதால் ஆலை உரிமையாளா்கள் அதிருப்தி அடைந்தனா்.

தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில், விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு, ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் ஆய்வு செய்து, விதிமீறல் கண்டறியப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. பின்னா், ஆலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, மீண்டும் பட்டாசு உற்பத்திக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், வேலையிழந்த தொழிலாளா்கள், அரசியல் கட்சியினா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 49 பட்டாசு ஆலைகளில் 34 ஆலைகளையும், தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் சாா்பில் , தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட 128 ஆலைகளில் 99 ஆலைகளின் மீதான தடை நீக்கப்பட்டு உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆலைகள் உள்பட 40 ஆலைகளில் விதி மீறலைக் காரணம் காட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் குறப்பாணை வழங்கப்பட்டது. இதனால் ஆலை உரிமையாளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

தீபாவளி பண்டிகைக்கு இரு மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், இதை அதிகாரிகள் தவிா்க்க வேண்டுமென ஆலை உரிமையாளா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.