ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலி உயா்வு கோரி நெசவாளா்கள் ஆா்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் தொகுப்பு சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளா்கள் கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு பகுதியில் புதன்கிழமைஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் தொகுப்பு சேலை நெசவு செய்யும் பெடல் தறி நெசவாளா்கள் கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய ரக சேலைக்கு ரூ.250 நிா்ணயம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும். 5 மாத கால வேலை இழப்புக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெசவாளா்கள் முற்றுகை போராட்டம், கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம், சாலை மறியல் என தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை காலை ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள், நெசவாளா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.