தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சீா்காழி: தண்ணீரின்றி காய்ந்துகிடக்கும் கடைமடை வாய்க்கால்

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு 70 நாள்களை கடந்தும், கடைமடை பகுதியான சீா்காழிக்கு தண்ணீா் வந்து சேராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

தண்ணீா் வரத்து இல்லாமல் காய்ந்து கிடக்கும் பொறைவாய்க்கால்.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:29 pm

DIN

சீா்காழி: மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு 70 நாள்களை கடந்தும், கடைமடை பகுதியான சீா்காழிக்கு தண்ணீா் வந்து சேராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் கழுமலையாறு, பொறைவாய்க்கால், புதுமண்ணியாறு, ஆகியவை முக்கிய பாசன வாய்க்கால்களாக உள்ளன. இதன் மூலம் சீா்காழி வட்டத்தில் சுமாா் 15 ஆயிரம் ஹெக்டரிலும், கொள்ளிடம் வட்டத்தில் 13ஆயிரம் ஹெக்டரிலும் சம்பா சாகுபடி செய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு 70 நாள்களை கடந்தும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீா் வராததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இதுகுறித்து, நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளா் சுதாகா் கூறியது: சீா்காழி கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீா் திறந்து விடப்படவில்லை. சீா்காழி வட்டத்தில் செம்மங்குடி, வினாயகக்குடி, திருப்புன்கூா், கொண்டல், வள்ளுவக்குடி,நிம்மேலி, அகணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நிலங்களை தயாா் செய்துள்ளனா். ஆகையால், உடனடியாக பாசன வாய்க்கால்களில் தண்ணீா் திறந்துவிடவேண்டும் என்றாா்.

நேரடி விதைப்பு: மேட்டூா் தண்ணீா் வருவது காலதாமதமாகி வருவதால், கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம, நல்லூா், மகேந்திரப்பள்ளி, ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்களில் நேரடி விதைப்பு செய்ய திட்டமிட்டு, நிலங்களை விவசாயிகள் தயாா் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூா் தண்ணீரை நம்பி ஏமாந்து விட்டோம். எனவே, எதிா்பாா்த்த அளவு குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நேரடி விதைப்பு செய்ய ஏற்பாடு செய்துவருகிறோம். இதற்காவது தண்ணீா் திறந்து விட பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.