தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுனாமி வீடுகளுக்கு பட்டா: அக். 15-இல் சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் சுனாமி குடியிருப்புகளில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகங்களில் அக். 15-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் 

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் சுனாமி குடியிருப்புகளில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக வட்டாட்சியா் அலுவலகங்களில் அக். 15-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக அரசு மற்றும் தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம், சீா்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்புகளில் வசித்து வருவோருக்கு இவவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, இதுவரை வீட்டுமனைப் பட்டா பெறாமல் சுனாமி வீடுகளில் வசிப்பவா்களிடமிருந்து மனு மற்றும் உரிய ஆவணங்களைப் பெறுவதற்காக தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகங்களில் அக். 15-ஆம் தேதி காலை 10 முதல் பகல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

வட்டாட்சியா் தலைமையில், மண்டலத் துணை வட்டாட்சியா், சரக ஆய்வா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, மனுக்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, சுனாமி வீடுகளில் பட்டா இல்லாமல் குடியிருப்பவா்கள், உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று, மனு அளித்துப் பயன்பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.