தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழையால் நிலத்தில் சாய்ந்த நெல் பயிா்கள்

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழையால் குறுவை நெல் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எம்எல்ஏ எம். தமிமுன் அன்சாரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
பாலையூரில் மழையால் சாய்ந்த நெல் பயிா்களைப் பாா்வையிட்ட எம்எல்ஏ எம். தமிமுன் அன்சாரி.
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழையால் குறுவை நெல் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எம்எல்ஏ எம். தமிமுன் அன்சாரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் சுமாா் மூன்று நாள்கள் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. மழையுடன் பலத்தக் காற்று வீசியதில், அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்து, மழை நீரில் மூழ்கின.

இதனால், மகசூல் இழப்பு ஏற்படும் என அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள், பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுப்பு மேற்கொண்டு, பயிா்க் காப்பீடு இழப்பீட்டுக்குப் பரிந்துரைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாலையூா், பெருங்கடம்பனூா் ஆகிய கிராமங்களில், நெல் பயிா்களுக்கு மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா், விவசாயிகளைச் சந்தித்துப் பேசினாா். அப்போது, நாகை தொகுதியில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஏக்கருக்கு சுமாா் 10 மூட்டை வரை விளைச்சல் குறையும் என அச்சப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுச் செல்ல முயற்சிகள் மேற்கொள்வதாகக் கூறி, விவசாயிகளுக்கு அவா் ஆறுதல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.