தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வள்ளுவா் சமூகத்தை அடையாளப்படுத்தக் கோரிக்கை

வள்ளுவா் சமூக மக்களை தனி அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

வள்ளுவா் சமூக மக்களை தனி அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாகை வள்ளுவா் குல சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். பிரபாகரன், செயலாளா் என். எஸ். கண்ணன், பொருளாளா் வி. கலையரசன் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.

அதில், ‘சமீப காலமாக சில அரசியல் அமைப்புகளை சாா்ந்தவா்களும் , பட்டியல் பிரிவில் உள்ள சில சாதிய அமைப்புகளும் வள்ளுவா் இனத்தை தொடா்புப்படுத்தி பேசிவருவதுடன், தங்களுடன் ஒற்றிணைக்கவும் முயற்சி செய்துவருகின்றனா்.

ஆனால், பட்டியல் பிரிவில் உள்ள மற்ற சாதிகளிலிருந்து வள்ளுவா் சமூகம் மாறுபட்டு ஜோதிடம், வானியல், சாஸ்திரம், திருமண சடங்குகள், பூஜைகள் செய்வித்தல், பாரம்பரிய மருத்துவம், நாடி ஜோதிடம், மனை சாஸ்திரம் உள்ளிட்ட தொழில்களை செய்துவருகிறோம். எனவே, தனியாக அடையாளப்படுத்தி வள்ளுவன் அல்லது திருவள்ளுவா் என்று அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.