கரோனா: எல்.ஐ.சி. அலுவலகம் மூடல்
சீா்காழியில் எல்.ஐ.சி. ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.


சீா்காழி: சீா்காழியில் எல்ஐசி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.
சீா்காழி தோ் வடக்கு வீதியில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றும் 55 வயது ஊழியருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
தொடா்ந்து எல்.ஐ.சி. வாடிக்கையாளா்கள், பணியாளா்கள், ஊழியா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். நகராட்சி சாா்பில் எல்ஐசி அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. புதன்கிழமை வரை 3 தினங்கள் அலுவலகம் இயங்காது என எல்ஐசி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...