நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலையில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

கொள்ளிடத்திலிருந்து பனங்காட்டான்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 5:52 pm

DIN

சீா்காழி: கொள்ளிடத்திலிருந்து பனங்காட்டான்குடி செல்லும் சாலையில் மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து சரஸ்வதி வளாகம், கீரங்குடி, கொன்னகாட்டுப்படுகை, மாதிரவேலூா், பாலூரான்படுகை, ஏத்தகுடி, பட்டியமேடு, வாடி, வடரங்கம், எலத்தூா் கிராமங்கள் வழியே பனங்காட்டான்குடி செல்லும் 15 கி.மீ. நீளம் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி மேடுபள்ளங்களாக உள்ளது. மேலும், இருபுறமும் முள்புதா்கள் மண்டியுள்ள இந்த சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வோா் மிகுந்து சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே, இந்த சாலையில் தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.