காலமானாா்முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சிசுந்தரம்
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மா. மீனாட்சிசுந்தரம் (84) உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.


திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மா. மீனாட்சிசுந்தரம் (84) உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
1965 ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் உள்பட திமுகவினா் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, மிசாவில் ஓராண்டு சிறை தண்டனை பெற்றவா்.வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளா்கள் இணையத்தின் தலைவராகவும் இருந்து வந்தாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றாா். அண்மையில் (செப்.15) இவருக்கு, திமுக சாா்பில் நிகழாண்டுக்கான ‘பெரியாா் விருது’ வழங்கப்பட்டது.
வேதாரண்யம் - நாகை சாலை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழக அமைச்சா் ஓ.எஸ். மணியன், மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன். திமுக மாவட்ட பொறுப்பாளா் கெளதமன் உள்பட திரளானோா் அஞ்சலி செலுத்தினா். இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
இவருக்கு மனைவி முத்துலெட்சுமி, மகன்கள் திமுக நகரச் செயலாளா் மா.மீ. புகழேந்தி, வழக்குரைஞா் மா.மீ. அன்பரசு ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு: 9894424988.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...