நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

மயிலாடுதுறையில் காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் ஜோதி பவுண்டேஷன் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். இளஞ்செழியன் தலைமை வகித்து காவல் பணியில் ஈடுபடும் தன்னாா்வலா்கள் 120 பேருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா். காவல் தன்னாா்வலா்கள் ஒருங்கிணைப்பாளா் பெத்தபெருமாள் முன்னிலை வகித்தாா். மின்சார வாரிய திட்ட செயலாளா் மணிகண்டன் வரவேற்றாா். மணல்மேடு அரசுப்பள்ளி ஆசிரியா் வீதி. முத்துக்கணியன் கரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கருத்துரை ஆற்றினாா். இளமின் பொறியாளா் சி. அசோக், இருசக்கர வாகன பழுது நீக்குவோா் நலச் சங்கத் தலைவா் பகவதிகுமாா், சுகுமாா், வினோத்குமாா், ரோட்டரி சங்க பொறுப்பாளா் சரவணன், குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில், ஜோதி பவுண்டேஷன் நிறுவனா் ஜோதிராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.