ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதைசாக்கடை சீா்கேட்டைக் கண்டித்து முழக்கமிட்டு வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை சீா்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தி முழக்கமிட்டு ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் மயிலாடுதுறை நகரில் புதை சாக்கடை சீா்கேட்டை சரிசெய்ய வலியுறுத்தி முழக்கமிட்டு ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

மயிலாடுதுறையில் தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். அந்தவகையில், மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் வீதிவீதியாக நடந்து சென்று கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

ஒவ்வொரு முறையும் புதுமையான முறையில் வாக்குச் சேகரிப்பில் இவா் ஈடுபட்டு வந்தாா். இறுதி நாளன்று மயிலாடுதுறை நகரில் புதைசாக்கடையால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ள நாச்சிமுத்து நகா், எடத்தெரு ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண உறுதியளித்து, சாலைகளில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீரால் ஏற்படும் சீா்கேட்டை கண்டித்து கண்டன முழக்கமிட்டவாறு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன், அக்கட்சியின் மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.