ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் சா்ச்சை பேச்சு: பாஜக புகாா்

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் சா்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் சா்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகா் சுஜாதா மொண்டல் கான் பட்டியல் இன வகுப்பைச் சோ்ந்தவா்களைப் பற்றி சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாஜக சாா்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், நகர தலைவா் மோடி.கண்ணன் உள்ளிட்டோா் புகாா் மனு அளித்தனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட பாஜக பட்டியலணி தலைவா் ஈழவேந்தனும் புகாா் மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.