மயிலாடுதுறை மாவட்ட முதல் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் முதல் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.1) நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் முதல் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.1) நடைபெற்றது.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் வாசுதேவன் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் பி.எம். முஹம்மதுபாஷித், புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வலியுறுத்தியும், சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைப்பது மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மனு அளித்தாா்.
காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்கத் தலைவா் குரு.கோபிகணேசன் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள், தரங்கம்பாடி வட்டத்தில் பாரத வங்கி தவிா்த்த மற்ற வங்கிகளில் கணக்குவைத்துள்ள விவசாயிகளுக்கு பயிா் பாதிப்பு நிவாரணம் வரவு வைக்கப்படவில்லை என மனு அளித்தனா்.
மேலும், வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, ஊனமுற்றோா் உதவித்தொகை, திருமண உதவித்தொகை கோரியும் பொதுமக்கள் மனு அளித்தனா். இதில், முதியோா் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த ஒருவரின் மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, உதவித் தொகைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...