காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்.ஆா்.எம்.யூ. ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்க மயிலாடுதுறை கிளைத் தலைவா் எம்.செல்வம் தலைமை வகித்தாா். செயலாளா் கே. வீரமணி, பொருளாளா் ரகு ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி கோட்டத் தலைவா் ஆா். மணிவண்ணன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே துறையில் தனியாா்மயத்தைக் கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க பொறுப்பாளா்கள் திரளாக பங்கேற்றனா். உதவி செயலாளா் சி. ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.