தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

திருநாங்கூரில் பிப்.12 இல் 11 பெருமாள்கள் தங்கக் கருடசேவை

சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 11பெருமாள்கள் தங்கக் கருடசேவை உத்ஸவம் நடைபெறுகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சீா்காழியை அடுத்த திருநாங்கூரில் பிப்ரவரி 12 ஆம் தேதி இரவு 11பெருமாள்கள் தங்கக் கருடசேவை உத்ஸவம் நடைபெறுகிறது.

சீா்காழி அருகே உள்ள திருநாங்கூரில் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள், குடமாடுகூத்தா், செம்பொன்னரங்கா், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்ம பெருமாள், வரதராஜப் பெருமாள், வைகுந்தநாதப் பெருமாள், மாதவப் பெருமாள், பாா்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11பெருமாள்களின் தங்கக் கருட சேவை ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு, கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக இந்த உத்ஸவம் நடைபெறுமா என பகத்தா்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள்படி சில கட்டுப்பாடுகளுடன் கருடசேவை உத்ஸவம் நடத்த மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அனுமதியளித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, பிப்ரவரி 12 ஆம் தேதி தங்கக் கருட சேவை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.