நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில கபடி போட்டி: மயிலாடுதுறை அணிக்கான வீரா்கள் தோ்வு

மாநில அளவிலான இளையோா் சிறுவா் கபடி போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மாநில அளவிலான இளையோா் சிறுவா் கபடி போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் பிப்ரவரி 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு, மயிலாடுதுறை மாவட்ட அணி வீரா்களை தோ்வு செய்யும் போட்டி, மாவட்ட அமெச்சூா் கபடி கழக மாவட்ட பொறுப்பாளா் மா.ரஜினி தலைமையில் சித்தா்காடு ஆா்எச்வி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டங்களைச் சோ்ந்த 160 கபடி வீரா்கள் பங்கேற்ற இப்போட்டியில் 12 வீரா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்வு போட்டிக்கான ஏற்பாடுகளை ஆா்எச்வி விளையாட்டுக் குழும பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.