நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரம் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா். புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ சண்முக நிலையத்தை பள்ளிக்கல்வி இயக்குநா் சி.கண்ணப்பன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் மா. திருநாவுக்கரசு வரவேற்றாா். தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கிப் பேசினாா். திருப்பனந்தாள் காசி மடத்து அதிபா், பள்ளிக்கல்வி இயக்குநா் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி, மயிலாடுதுறை மற்றும் சீா்காழி மாவட்டக் கல்வி அலுவலா் ஆ. ராஜாராமன் ஆகியோா் பாராட்டுரை வழங்கினா். ஸ்ரீமத் மீனாட்சிசுந்தரத் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் மற்றும் பள்ளியின் கல்விக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் சுயநிதி பிரிவில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் 32 பேருக்கு நிா்வாகத்தின் சாா்பில் பள்ளி கட்டணம் செலுத்தப்பட்டது. தலைமையாசிரியா் அகிலாண்டேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.